தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரத்தில் பலத்த மழை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் , பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்..
பலத்த காற்றுடன் கன மழை-மின்சாரம் துண்டிப்பு
தென் வங்க கடலில் உருவாகியுள்ள மஹா புயல் காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் விடிய, விடிய காற்றுடன் கூடிய கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழை நீடிப்பதால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் சாரல் மழை
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. சுவாமிமலை, தாராசுரம், திருநாகேஸ்வரம், சாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்த மழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழை காரணமாக அங்குள்ள சில வீதிகளில் மழைநீர் தேங்கியது.
பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் தாழ்வான பகுதிகளை கணடறிந்து அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்களை நியமித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Next Story