ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வெளியிட இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கையின் முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக தி.மு.க. வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில், குறிப்பிட்ட சுற்றுகளின் ஓட்டுகள் மற்றும் தபால் வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வைத்து மீண்டும் எண்ணப்பட்டது. இந்த முடிவை வெளியிடுவதற்கு எதிராக அந்த தொகுதியில் வென்ற அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மறு ஓட்டு எண்ணிக்கையின் முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 13ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.
Next Story