இரட்டைமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரி வழக்கு - தமிழக மீன்வளத்துறையை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

இரட்டைமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரும் கோரிக்கையை தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையிடம் வைக்குமாறு மீனவர் சங்கங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இரட்டைமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரி வழக்கு - தமிழக மீன்வளத்துறையை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
கடந்த 2000-ஆம் ஆண்டு இரட்டை மடி வலைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் இரட்டை சுருக்கு மடிவலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கியிருந்தது. இதனை மேற்கோள்காட்டி சென்னை மற்றும் ராமநாதபுரம் மீனவர் சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளை ஆகியவற்றில் தொடர்ந்த வழக்குகளில் மீனவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு கூறியிருந்தது. இந்நிலையில் தனுஷ்கோடி மீனவர்கள் சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு கோரிக்கையை மாநில மீன்வளத்துறையிடம் மீண்டும் அளிக்கவும், பரிசீலிக்கவில்லையென்றால், அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும் தெரிவித்து, மனுவை முடித்து வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்