"கரைசேர முடியாமல் ஆழ் கடலில் தவிக்கும் மீனவர்கள்" - மீனவர்களை மீட்க, மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

சூறைக்காற்று காரணமாக கரை சேர இயலாமல் ஆழ்கடலில் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்கவேண்டும் என்று மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கரைசேர முடியாமல் ஆழ் கடலில் தவிக்கும் மீனவர்கள் - மீனவர்களை மீட்க, மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை
x
சூறைக்காற்று காரணமாக கரை சேர இயலாமல் ஆழ்கடலில் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்கவேண்டும் என்று மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அரபி கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த கன்னியாகுமரி மீனவர்கள் அரசின் புயல் எச்சரிக்கை  காரணமாக கரை திரும்பியுள்ளனர். இந்த நிலையில், கோவா மாநில ஆழ்கடல் பகுதியில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த  32  மீனவர்கள் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது. சூறைக்காற்று காரணமாக கரை திரும்ப முடியாமல் ஆழ்கடலில் தவித்துக்கொண்டு இருக்கும் மீனவர்களை மீட்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்