"டெங்கு காய்ச்சலுக்கு தவறான சிகிச்சை அளித்தால் நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ஆவடி, மாநகராட்சி அரசுப்பள்ளிகளுக்கு, தொற்று நோய் தடுப்பு பணிகளுக்காக 42 மருத்துவ குழுக்கள் மற்றும் 10 புகை தெளிப்பான் வாகனங்களை அமைச்சர் பெஞ்சமின் முன்னிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
x
சென்னை ஆவடி, மாநகராட்சி அரசுப்பள்ளிகளுக்கு, தொற்று நோய் தடுப்பு பணிகளுக்காக 42 மருத்துவ குழுக்கள் மற்றும் 10 புகை தெளிப்பான் வாகனங்களை அமைச்சர் பெஞ்சமின் முன்னிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  பின்னர்  ஆவடி பொது மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர்கள் நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தனர் .   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜபாஸ்கர் , டெங்கு காய்ச்சலுக்கு தவறான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்