குரூப் 2 தேர்வு பாடத் திட்டத்தில் அதிரடி மாற்றம்

குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குரூப் 2 தேர்வு பாடத் திட்டத்தில் அதிரடி மாற்றம்
x
குரூப் - 2  முதல்நிலை தேர்வில், தமிழர் பண்பாடு கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், அதிகமான கேள்விகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு,100 மதிப்பெண்களை கொண்டதாக இருக்கும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெறும் முதன்மை தேர்வின் உட்பிரிவாக, 2 தாள்கள் கொண்ட தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு மொழிபெயர்ப்பு என்ற வகையில் கேள்விகள் கேட்கப்படும் என்றும், இதில் 25 மதிப்பெண்கள் கண்டிப்பாக பெற வேண்டும் எனவும் ரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாடத்திட்டமானது பட்டப்படிப்பு நிலையில் இருந்து, 10 ஆம் வகுப்பு நிலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என கூறப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் 25 மதிப்பெண்கள் பெறும் தேர்வர்களுக்கு மட்டுமே, அவர்களது இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி. இரண்டாம் தாள் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்றும்,  இதில் பெறக்கூடிய மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே வேலைக்குரிய விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வில் முதல்தாளில் பெறக்கூடிய மதிப்பெண்கள் வேலைக்குரிய மதிப்பெண்களாக கணக்கில் கொள்ளப்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள், கடைசி கட்டத்திற்கு செல்வதற்கான தகுதி மதிப்பெண்களாகவே கணக்கில் கொள்ளப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்