தீபாவளி மது விற்பனை : டாஸ்மாக் அறிவுறுத்தல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மூன்று நாட்களில் சுமார் 350 கோடி ரூபாய்க்கு, மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வழக்கமான நாட்களில் 60 முதல் 65 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது.
பண்டிகை நாட்களில் இந்த வருமானம்100 கோடியில் இருந்து 150 கோடியாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால், அன்று 150 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய நாள் 140 கோடிக்கும், வெள்ளிக்கிழமை 60 கோடிக்கும் விற்பனையாகும் என்றும் டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது இந்த ஆண்டு, 350 கோடி ரூபாய் மது விற்பனைக்கு, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் 15 நாட்களுக்கான மதுவகைகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளை 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்து மது வகைகளையும் கண்ணில் தெரியும்படி வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story