புரட்டாசி முடிந்தது : மீன்களை அள்ள, படையெடுத்த அசைவ பிரியர்கள்
புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று, காசிமேட்டில் மீன் பிரியர்கள் குவிந்தனர்.
புரட்டாசி மாதத்தில் அசைவம் உண்ணுவதை தவிர்த்து, பெரும்பாலானோர் பெருமாளுக்கு பூஜை செய்வார்கள் என்ற நிலையில், கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 17-ஆம் தேதி வரையிலான விரதம் முடிவுக்கு வந்துள்ளது. புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று, காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அதிகாலை விடிவதற்கு முன்னரே, மீன்கள் அள்ளுவதற்காக, அசைவ பிரியர்கள் காசிமேட்டில் குவிந்தனர். இதனால், மீன்களின் விலை கணிசமாக உயர்ந்தது. ஆனால், பருவமழை தொடங்கியது முதல், மீனவர்கள் கடலுக்கு அதிகம் செல்லாத நிலையில், மீன் வரத்து குறைந்ததால், விரும்பிய மீன்கள் கிடைக்காமல், அசைவ பிரியர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். ஆனாலும், மீன்களைத் தேடி அசைவப் பிரியர்களின் படையெடுப்பால், காசி மேடு களை கட்டியது.
Next Story