"மதுரையில் பழிக்கு பழியாக நடைபெறும் அதிக கொலைகள்" - மதுரை காவல் ஆணையர் பேச்சு
மதுரையில் காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பீபீ குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை மாநகர காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் உட்பட பல முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மதுரையில் பழிக்கு பழியாக அதிக கொலைகள் நடைபெறுவதாகவும், இது தடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணம் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்காக காவல்துறை சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story