சினிமா பாணியில் பைனான்சியர் கொலை... பாதுகாப்புக்காக வேலைக்கு வைத்தவர்களே கொலை

புதுச்சேரியில், வட்டி தொழில் செய்து வந்த பைனான்சியர் கொலை வழக்கில் கைதான 5 பேர் அளித்த வாக்குமூலம், சினிமாவை மிஞ்சும் வகையில் பயங்கரமாக உள்ளது.
சினிமா பாணியில் பைனான்சியர் கொலை... பாதுகாப்புக்காக வேலைக்கு வைத்தவர்களே கொலை
x
புதுச்சேரியில், வட்டி தொழில் செய்து வந்த பைனான்சியர் கொலை வழக்கில் கைதான 5 பேர் அளித்த வாக்குமூலம், சினிமாவை மிஞ்சும் வகையில் பயங்கரமாக உள்ளது. புதுச்சேரி, கொசப்பாளையம் கருணாபிள்ளை  வீதியை சேர்ந்த ஆனந்த பாலாஜி, வட்டிக்கு கடன் வழங்கும் தொழிலை செய்து வந்தார். கடந்த 16 ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆனந்த பாலாஜியை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், சிவசங்கர், விக்னேஷ், ஸ்டீபன், மதன், விக்கி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வட்டி வசூல் செய்து, கொடுக்கும் வேலையை செய்து வந்த அருள், மணிகண்டன் மற்றும் கிஷோர் ஆகிய மூவர், மது குடிக்க ஆனந்தபாலாஜியிடம் அடிக்கடி பணம்  கேட்டுள்ளனர். இது தொடர்பான தகராறில் மூவரும் சிறையில் உள்ளனர். அவர்கள் வெளியில் வந்தால், தன்னை கொலை செய்வார்கள் என்ற அச்சத்தில், 5 பேரை  ஆனந்த் பாலாஜி வேலைக்கு  சேர்ந்துள்ளார். அந்த குழுவினர் நண்பர்கள் என்பது தெரியாமல், அவர்களிடம் சிறையில் இருக்கும் 3 பேரை தீர்த்துக் கட்ட ஆனந்தபாலாஜி பேரம் பேசியுள்ளார். இங்குதான் பிரச்சினை வெடித்தது. 

சிறையில் இருப்பவர்கள் தங்கள் நண்பர்கள் என தெரிவித்த 5 பேரும், அவர்களை கொலை செய்ய மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஆனந்த்பாலாஜி, 5 பேரையும் ஆள் வைத்து கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். அடுத்தடுத்து கொலை செய்ய தூண்டியதால், ஆனந்த பாலாஜியை, ஐந்து பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். அவர்களை பிடித்த போலீசார், கத்தி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பணம் கேட்டு மிரட்டியவர்களை சிறைக்கு அனுப்பியும் பயம் தீராமல், வேறொரு வழக்கில் ஜாமீனில் எடுத்தவர்களை அனுப்பியது, அவர்கள் நண்பர்களை கொல்ல மறுத்து திட்டம்போட்டு முதலாளியை தீர்த்துக்கட்டியது என விசாரணையில் வெளியான தகவல்கள் சினிமாவை மிஞ்சும் பயங்கரமாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்