மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கம் : கருத்தரங்கை துவக்கி வைத்த உச்சநீதிமன்ற நீதிபதி

மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, சட்ட ஆணையம் அளித்த பரிந்துரை 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் வேதனை தெரிவித்தார்.
மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கம் : கருத்தரங்கை துவக்கி வைத்த உச்சநீதிமன்ற நீதிபதி
x
தென் மாநிலங்களின் மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்து பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், நீதி எது, அநீதி எது என்பது எப்போதும் விவாதத்துக்குள்ளான விஷயமாகவே உள்ளது என்றார். அரசு சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அதன் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றார். மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, சட்ட ஆணையம், பரிந்துரை வழங்கிய போதும் கடந்த 20 ஆண்டுகளாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். வழக்குகள் எண்ணிக்கையை குறைக்க மாற்று தீர்வு முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்