பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு - தடுப்பணை கட்டித்தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, புலிச்சோலை அருவி மற்றும் வில்பட்டி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், பெரியாற்றில் கலப்பதால் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி விவசாயிகள், விளை பொருட்களை தலையில் சுமந்தபடி, ஒற்றை கையில் கயிற்றை பிடித்து ஆற்றை கடந்து வருகின்றனர். எனவே, பெரியாற்று பகுதியில் தடுப்பணையுடன் கூடிய பாலத்தினை கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story