இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் : மனித உரிமைகள் ஆணையம் கேள்வி
இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசின் உத்தரவுபடி, திருவள்ளூர் மாவட்டம், உத்தண்டி கண்டிகை கிராமத்தில் இடம் பெயர்ந்த இருளர் இன மக்களுக்கு, சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட திருவள்ளூர் ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது
Next Story