"7 தமிழர் விடுதலை முடிவை ஆளுநர் வெளியிட வேண்டும்" - ராமதாஸ்

ஏழு தமிழர்கள் விடுதலை குறித்த ஆளுநரின் முடிவு என்னவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வமாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7 தமிழர் விடுதலை முடிவை ஆளுநர் வெளியிட வேண்டும் - ராமதாஸ்
x
ஏழு தமிழர்கள் விடுதலை குறித்த ஆளுநரின் முடிவு என்னவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வமாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்க மறுத்து, திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதே பரிந்துரையை தமிழக அரசு, மீண்டும் அவருக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். ஆளுநராக இருப்பவர், அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ள டாக்டர் ராமதாஸ், சொந்த விருப்பு - வெறுப்பின்படி செயல்படக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்