தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவக்கம்: "விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும்" - வேளாண் துறை முதன்மை செயலாளர்

வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் விவசாயிகள் பயிர் காப்பீடு உடனடியாகச் செய்ய வேண்டுமென வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவக்கம்: விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் - வேளாண் துறை முதன்மை செயலாளர்
x
வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் விவசாயிகள் பயிர் காப்பீடு உடனடியாகச் செய்ய வேண்டுமென வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை,  வேளாண்மை துறை முதன்மை செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  பேசுகையில்,  தமிழகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் கடந்த இரண்டரை வருடங்களில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார். எனவே மழை விவசாயிகள் பயிர் காப்பீட்டு செய்திருந்தால்,  பாதிப்பு ஏற்படும்போது இதன் மூலம் பயன் அடைந்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்