நீட் ஆள்மாறாட்ட முறைகேடு எதிரொலி-5 ஆயிரம் மாணவர்களின் ரேகை பதிவு ஆய்வு
நீட் ஆள்மாறாட்ட முறைகேட்டின் எதிரொலியாக 5 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவை ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் பூதகரமாக வெடித்ததை தொடர்ந்து, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை குறித்து பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களின் கைரேகை பதிவை ஆய்வு செய்ய மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் பெரும்பாலான மாணவர்களின் கைரேகைகள் பெறப்பட்டுள்ளன. தேசிய தேர்வு முகமை அளிக்கக்கூடிய கை ரேகைகளுடன், தற்போது மருத்துவ கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கைரேகைகளை ஒப்பிட்டு பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் வேறுபாடுகள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
Next Story