ரவிச்சந்திரன் பரோல் தொடர்பான மனு : 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிசந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து 3 வாரங்களுக்குள் சிறைத்துறை அதிகாரிகள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ரவிச்சந்திரன் பரோல் தொடர்பான மனு : 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிசந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து 3 வாரங்களுக்குள் சிறைத்துறை அதிகாரிகள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ரவிச்சந்திரனின் தாயார் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது மகன் சுமார் 27 ஆண்டு காலம் சிறையில் உள்ளதாகவும் 4 முறை மட்டுமே பரோலில் வெளியே வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். ரவிச்சந்திரன் விடுதலை குறித்த மனு ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். எனவே தனது மகனுக்கு ஒரு மாதம் சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள்  வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பரோல் மனு மீது 3 வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்