மழை காலங்களில் வேகமாக பரவும் கண் நோய் - தவிர்ப்பது எப்படி?
மழைக்காலங்களில் வேகமாக பரவும் கண் நோய் பாதிப்பை தடுக்க மருத்துவர்களை அணுக வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை காலங்களில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய்
வேகமாக பரவுகிறது. ஒருவித வைரசால்ஏற்படும் இந்த கண் நோயால்
கண்கள் சிவப்பு நிறமாகி எரிச்சல் ஏற்படுகிறது. சென்னையில்
உள்ள எழும்பூர் கண் மருத்துவமனையில் இந்த மாதம் மட்டும் சிறுவர்கள்
முதல் பெரியவர்கள் வரை 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று
சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள்
தானாக சிகிச்சை முயற்சிகளில் ஈடுபடகூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கண்நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் கண்நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். வெளியில் செல்லும் போது கண்களில் தூசு செல்லாமல் பார்த்து கொள்வது, கண்ணில் வலி ஏற்பட்டாலோ, கண்ணில் உறுத்தல் ஏற்பட்டாலோ உடனடியாக கண் மருத்துவரை அணுகுதல் நல்லது என்றும்
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மெட்ராஸ் நோய் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story