டெங்கு காய்ச்சல் பாதிப்பு - தலைமை செயலாளர் ஆலோசனை
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியும் விதமாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியும் விதமாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. காலை 11 மணிக்கு துவங்கிய இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ், சமூக நலத்துறை செயலாளர் மதுமதி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி உட்பட 25 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். காலையில் அரியலூர், சென்னை, கோவை, கடலூர் ,தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ள நிலையில்,
பிற்பகலில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் , சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்கள், இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை தலைமைச் செயலாளர் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் காரணமாக விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்டங்கள் இந்த ஆய்வு பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story