நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : சான்றிதழ் சரிபார்ப்பில் ஈடுபட்டவர்களிடம் நேரில் விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக, கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : சான்றிதழ் சரிபார்ப்பில் ஈடுபட்டவர்களிடம் நேரில் விசாரணை
x
நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டம் தொடர்பாக மாணவர்கள் உதித் சூர்யா, பிரவீன், ராகுல் உள்ளிட்ட 10 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயின்ற கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையின்போது சான்றிதழ்களை சரிபார்த்த குழுவினரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக, சிபிசிஐடி போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் எஸ்.ஆர்.எம், தேனி மருத்துவ கல்லூரி மற்றும் சத்யசாய் மருத்துவ கல்லூரிகளின் பேராசிரியர்கள் குழு, தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான நிலையில், அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் 2 ஆம் நாளான நேற்று, பாலாஜி மருத்துவ கல்லூரி, சவீதா மருத்துவ கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினர் ஆஜரான நிலையில், அவர்களிடம், சிபிசிஐடி போலீசார் நாள் முழுவதும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாணவர் சேர்க்கையின்போது அளிக்கப்பட்ட சான்றிதழ்கள், சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைத்தனர். பேராசிரியர்கள் குழுவினரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையை இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்