"நீர்பாசனம் திட்டம் குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி வரும் அதிமுக" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நீர்பாசனம் திட்டம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை அதிமுகவினர் கூறி வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நீர்பாசனம் திட்டம் குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி வரும் அதிமுக - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
x
தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நீர்பாசனம் திட்டம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை அதிமுகவினர் கூறி  வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்படாமலேயே திட்டம் அறிவிக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் திட்ட அறிவிப்பு வந்தவுடனேயே நெல்லை மாவட்டத்தில் 694 ஹெக்டேர் நிலமும், தூத்துக்குடி மாவட்டத்தில் 106 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதிமுக ஆட்சியில் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும் அழகிரி கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்