பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பகுதி நேர ஆசிரியர்கள்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரியும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும் பிரதமர் மோடிக்கு பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பகுதி நேர ஆசிரியர்கள்
x
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரியும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும் பிரதமர் மோடிக்கு பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் மத்திய அரசின் சார்பில், ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை உள்ளிட்ட பாடங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். 

இந்நிலையில், 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் சரியாக செயல்படுத்தவில்லை என பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஊதிய உயர்வு, 9 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு கால விடுப்பு, இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு குடும்பநலநிதி, போனஸ் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்காமல் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு போதுமான நிதியை தராததால், பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரமும், ஊதிய உயர்வும் தமிழக அரசால் செய்ய முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.  பணி நிரந்தரம் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ள பகுதி ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர், நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்