தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்த வழக்கு : வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி மனு
தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்.பி, கனிமொழி வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் சந்தான குமார், தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்.பி, கனிமொழி வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் சந்தான குமார், தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அக்டோபர் 29ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் வழக்கு தொடர்ந்த சந்தான குமாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Next Story