3,062 பேர் இணைந்து அம்பேத்கர் முகத் தோற்றம் அமைப்பு : உலக சாதனை நிகழ்வாக அங்கீகாரம்

பத்தாயிரம் பனை விதைகளால், திருமாவளவன் முகத் தோற்றம் உருவாக்கியது உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூன்று நிகழ்வுகள் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.
3,062 பேர் இணைந்து அம்பேத்கர் முகத் தோற்றம் அமைப்பு : உலக சாதனை நிகழ்வாக அங்கீகாரம்
x
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள மைதானத்தில், 10 ஆயிரத்து 465 பனை விதைகளால் திருமாவளவன் முகத் தோற்றம் அமைக்கப்பட்டது. இதேபோல், திருமாவளவனின் முகம் பொறித்த முகமூடியை அணிந்த மூவாயித்து 62 பேர், அம்பேத்கரின் முகத்தோற்றத்தை ஏற்படுத்தினர். பிரம்மாண்ட வடிவத்தில் இருந்த இந்த முகத் தோற்றம், அங்கிருந்த ஆயிரக் கணக்கானவர்களை பிரமிக்க வைத்தது. அதோடு, பெரிய அளவில் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, கைகளில் துணிப்பை ஏந்தி, விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த மூன்று நிகழ்வுகளையும், யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட், பியூச்சர்ஸ் கலாம்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகியவை சார்பில் அங்கீகரிக்கப்பட்டு  சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்