சீன அதிபருக்கு பரிசளிக்கப்பட்ட சிறுமுகை பட்டின் சிறப்புகள்...
சீன அதிபர் ஜின் பிங்கிற்கு பரிசளிக்கப்பட்ட அவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறுமுகை பட்டு தயாரிக்கப்பட்ட விதம்.
திரைச்சீலை, பொன்னாடைகள் தயாரிப்பதில் தனி முத்திரை பதித்து வருபவர்கள், சிறுமுகை நெசவாளர்கள். 2 நாள் பயணமாக தமிழகம் வந்த சீன அதிபரை பொன்னாடை அணிவித்து வரவேற்பதற்கு ஏற்பாடு செய்தது தமிழக அரசு. உடனே அரசு தேர்வு செய்தது சிறுமுகை ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தைத் தான் ஜின்பிங் உருவம் பதித்த பொன்னாடையை தயாரிக்கும்படி அந்த சங்கத்தை கேட்டுக் கொண்டது தமிழக அரசு. இதையடுத்து சங்க உறுப்பினர் தர்மராஜ் ஆலோசனையின் பேரில் நெசவாளர்கள் சண்முகம், மனோஜ் ஆகியோர் பொன்னாடையை தங்கள் கற்பனைத் திறனால் வடிவமைக்க தொடங்கினர். இந்த பணி பத்து நாட்கள் இரவு பகலாக நடைபெற்றது. சீன தேசிய கொடியில் உள்ள சிவப்பு வண்ணத்தை மனதில் கொண்டு பொன்னாடையை சிவப்பு வண்ணத்தில் தயாரிக்க தொடங்கினர், நெசவாளர்கள். கைதேர்ந்த கைத்தறித் திறனால் கிளாசிக் பட்டு நூல்களைக்கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சீன அதிபர் ஜின்பிங் உருவம் காண்போரை வெகுவாக கவர்ந்தது. கைத்தறியில் ஒரு புரட்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தி வரும் நெசவாளர்கள், பிரதமர் சீன அதிபருக்கு பொன்னாடையை பரிசாக வழங்கிய தருணத்தை நெகிழ்ச்சியுடன் கூறி மகிழ்ச்சி அடைகின்றனர்.
Next Story