மாமல்லபுரத்திற்கு நீர் மூழ்கி கப்பல் உட்பட 3 கப்பல் வருகை

சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பணிக்காக 3 கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்திற்கு நீர் மூழ்கி கப்பல் உட்பட 3 கப்பல் வருகை
x
பிரதமர் மோடி- சீன அதிபர் வருவதையொட்டி, காவல்துறை வளையத்திற்குள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கடல் வழியாக யாரும் நுழைய முடியாத வகையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான  2 கப்பல்கள் மற்றும்  நீர் மூழ்கி கப்பல் மாமல்லபுரம் கடற்பகுதியில் முகாமிட்டுள்ளன. கடற்கரை கோயிலுக்கு கிழக்கே ஒரு மைல் தொலைவில் ஆயுதம் தாங்கிய 2 கப்பல் மற்றும்  நீர் மூழ்கி கப்பல், நங்கூரமிட்டு  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமான  நபர்கள், திபெத்தியர்கள் என யாராவது படகு மூலம் ஊடுருவாமல் தடுக்க  அதி நவீன ரேடார் மூலம் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்