"பொய்யான வாக்குறுதியால் மரியாதை இழந்து நிற்கும் ஸ்டாலின்" - அமைச்சர் பாண்டியராஜன்
கவர்ச்சிகரமான பொய் வாக்குறுதிகளை கொடுத்த ஸ்டாலின் மரியாதையை இழந்து நிற்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
கவர்ச்சிகரமான பொய் வாக்குறுதிகளை கொடுத்த ஸ்டாலின் மரியாதையை இழந்து நிற்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், நடைமுறையில் சாத்தியமில்லாத நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக அளிப்பதை மக்கள் உணர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், மத்திய அரசுக்கு அடிமை சேவகம் செய்யும் எந்த தேவையும் அதிமுகவுக்கு இல்லை என தெரிவித்தார்.
Next Story