ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் : 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் புறப்பட்ட ரயில்
சென்னை குடிநிர் பிரச்சனையை தீர்க்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்தது.
சென்னை குடிநிர் பிரச்சனையை தீர்க்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்தது. இதன் அடிப்படையில், மேட்டுக்குப்பம் பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு பெரிய குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு தினமும் 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் குடிநீர், கடந்த ஜூலை 12 ஆம் தேதி முதல் கொண்டு வரப்படுகிறது. இதுவரை 159 முறை குடிநீர் எடுத்து வரப்பட்ட நிலையில், கடைசி நாளாக இன்று 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து எடுத்து செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story