நாங்குநேரி இடைத்தேர்தல் புறக்கணிப்பு - கிராம மக்கள் போராட்டம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மாவடி கிராம மக்கள், கருப்புக் கொடி ஏற்றி, இடைத்தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாங்குநேரி இடைத்தேர்தல் புறக்கணிப்பு - கிராம மக்கள் போராட்டம்
x
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மாவடி கிராம மக்கள், கருப்புக் கொடி ஏற்றி, இடைத்தேர்தல் புறக்கணிப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த கிராமத்தில், சாலை, பாலம், மற்றும்  குடிதண்ணீர்  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரக்கோரி,  அதிகாரிகளிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, அக்கிராம மக்கள், இடைத்தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவு ஏற்படாததால், போராட்டத்தை தொடர்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்