தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, முதலமைச்சர் பழனிசாமி, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆயுத பூஜை கொண்டாடினார். இதனிடையே, அவரது வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இடைத்தேர்தலில் திமுக பணம் கொடுத்து வெற்றி பெற முயற்சிக்கும் என குற்றம்சாட்டினார்.
Next Story