மகன் போல உதவும் நாய் - மக்கள் வியப்பு
நாய் ஒன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது திசையன்விளை பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாய் ஒன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது திசையன்விளை பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது நாய் கருப்பன், உரிமையாளருக்காக கடைக்கு சென்று வருவது என அவர்களது மகன் போலவே மாறியுள்ளது. பொருட்களை பட்டியலிட்டு, சிறிய டப்பாவில் போட்டு தனசேகர் கொடுக்க, அதனை வாயில் கவ்வியவாறு கடைக்கு கொண்டு செல்லும் நாய், பொருட்களை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்கிறது.
Next Story