இன்று ஆயுத பூஜை பண்டிகை : களைகட்டிய கடைத்தெருக்கள்
தொழில் கருவிகளுக்கு பூஜை செய்து வழிபடும் ஆயுத பூஜை பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
ஆண்டுக்கொரு முறை வீடுகள், அலுவலகங்கள் மர்றும் தொழில்கூடங்களில் பொருட்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, மாலை போட்டு, பூஜை செய்யும் பண்டிகை ஆயுத பூஜை. குழந்தைகளின் குட்டி சைக்கிள் முதல் பெரியோர் பயன்படுத்தும் கார் வரை படிக்க பயன்படுத்தும் புத்தகம், பேனா முதல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சுத்தியல், அரிவாள் வரை அனைத்தையும் அலங்கரிப்பதற்காக பூஜைப் பொருட்களை வாங்க கடந்த இரண்டு நாட்களாக கடைத்தெருக்கள் களைகட்டின. பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழம், பூசணிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு, வாழை மரங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இன்று, சுவாமி படங்களின் முன், பொரி, அவல், பழம், இனிப்பு வகைகளை படையலிட்டு, தொழிலிலும், படிப்பிலும் ஏற்றம் பெற வழிபாடு நடத்தப்படுகிறது. கலைகள் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் விஜயதசமி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. குழந்தைகளுக்கு அரிச்சுவடி தொடங்க கோவில்களில் சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Next Story