அறந்தாங்கியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபரின் கையில் ஊசி போடும் தழும்பு இருந்ததையடுத்து அந்த நபர் போதை ஊசி பயன்படுத்துவது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தை அறிந்து கொண்ட போலீசார், அங்கு மாறு வேடத்தில் சென்று போதை மருந்தை வாங்கியுள்ளனர். போலீசார் என்பதை தெரியாமல், போதை மருந்தை விற்பனை செய்த ஜெகன், ரியாஸ் ஆகியோரை கையும் களவுமாக போலீசார் பிடித்தனர். அத்துடன் போலீசார் விசாரணையை நிறுத்தாமல் இந்த போதை மருந்து எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது என்பது குறித்து தருவி துருவி கேட்டனர்.
அப்போது திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் சேர்ந்து கும்பல் ஒன்று போதை பொருட்களை , இந்த இளைஞர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. அந்த போதை கும்பலின் தகலை போலீசார் சேகரித்தனர். இதனையடுத்து டிஎஸ்பி கோகிலா தலைமையிலான போலீசார், அந்த போதை கும்பலை சுற்றி வளைத்து பெண் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story