சென்னையில் களை கட்டிய நாடக திருவிழா-நாடக அரங்குகளை ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை

சென்னையில் நடந்து வரும் நாடக திருவிழா, பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்
x
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  சென்னையில் உள்ள கேரள சமாஜம்  ஆகியவை இணைந்து  நாடக திருவிழாவை, சென்னையில் நடத்தி வருகின்றன.  கடந்த 2 ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த நாடக திருவிழாவில்  பிரபல தமிழ் எழுத்தாளர்களின் நாடகங்களை சமகால நாட்டு நடப்புகள், அரசியல் நெடிகளுடன் சேர்த்து  கலைஞர்கள் அரங்கேற்றி வருகின்றனர். பிரபல எழுத்தாளரான கி.ராஜநாராயணனின், ‛நாற்காலி' நாடகத்தை, கோவையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள்  குழுவினர் அரங்கேற்றியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகவும் முத்தமிழில் மூன்றாவதாகவும் விளங்கும் நாடக கலையை மேம்படுத்தவும், வளர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கலைஞர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்