இன்று வள்ளலாரின் 197-வது அவதார தினம் : ஞானசபையில் நடைபெற்ற திருஅருட்பா முற்றோதல்
வடலூரில் வள்ளலாரின் 197-வது அவதார தினம் கொண்டாடப்பட்டது.
கடலூர் மாவட்டம், வள்ளல் பெருமான் மருதூர் கிராமத்தில், கடந்த 1823-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி ராமலிங்க அடிகளார் பிறந்தார். சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை தொடங்கிய இவர், அதன் கொள்கைகளைப் பரப்பி வந்தார். அவரை போற்றும் வகையில் அவரது 197-வது அவதார தினத்தில், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் கொள்கைகளை, இசை நிகழ்ச்சிகள் மூலமாகவும், பிரசங்கம் மூலமாகவும், கொண்டாடப்பட்டது. அவதார திருநாளை முன்னிட்டு, தருமச் சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து, ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக உத்தரபிரதேச எம்பி அக்னிவேஷ் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story