கட்டாயம் தமிழ் கற்கும் சட்டம்: "13 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாத அவலம்" - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி

கட்டாயம் தமிழ் கற்கும் சட்டத்தை நிறைவேற்ற 13 ஆண்டுகளாக நீடித்து வரும் சிக்கல் தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
x
தமிழகத்தில்,  குறைந்தது 10 ம் வகுப்பு வரையாவது அனைத்து மாணவர்களும் கட்டாயம் தமிழை ஒரு பாடமாக படிக்க வேண்டும் என்ற  சட்டம் 2006  ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்டது , ஆனால், 1500க்கும் மேற்பட்ட சிறுபான்மை பள்ளிகளில் போதிய தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படாத‌தால், தேர்வு எழுதுவதில் சிக்கல் தொடர்கிறது. சிறுபான்மை பள்ளிகள், இதனை காரணம் காட்டி,  உயர் நீதிமன்றத்தில்  ஒவ்வொரு ஆண்டும் விலக்கு பெற்று வந்தன. இந்த ஆண்டு ஒருபடி மேலே போய், 2022 ஆம் ஆண்டு வரை விலக்கு  பெற்று விட்டனர் .  இது தமிழ் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.








Next Story

மேலும் செய்திகள்