நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ. 1,34,500 பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பாளையங்கோட்டை அஞ்சலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பது தெரியவந்தது. முறையான ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பாளையங்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Next Story