"இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள்" - பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்றும் எட்டாவது அட்டவணையில் உள்ள மிக தொன்மையான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கிட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உண்மையான முறையில் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை நிறைவேற்றினால், தமிழர்கள் பிரதமருக்கு என்றென்றும் நன்றி பாராட்டுவார்கள் என அறிக்கையில் அவர் கூறியுள்ளார். தமிழ்மொழி மீது பிரதமர் காட்டும் அக்கறை, விரைவில் நடைமுறைச் செயலாக்கத்திற்குக் வரப்படும் என மிகுந்த நம்பிக்கையுடன் மக்கள் எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Next Story