இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு : இறுதி வேட்பாளர் பட்டியல் அக்.3-ல் வெளியீடு

தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் வருகிற 21ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு : இறுதி வேட்பாளர் பட்டியல் அக்.3-ல் வெளியீடு
x
தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் வருகிற 21-ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளில், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், தேர்தல் அலுவலர் நடேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் வந்து, வேட்புமனு தாக்கல் செய்தார். நாங்குநேரி தொகுதியில், இதுவரை, 46 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஊர்வலமாக வந்து, வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல, திமுக வேட்பாளர் புகழேந்தி, முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில், ஊர்வலமாக வந்து, தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். விக்கிரவாண்டியில், மொத்தம், 28 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில், காங்கிரஸ் சார்பில், ஜான்குமாரும், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரனும் போட்டியிடுகிறார்கள். அங்கு, 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. எனவே, இந்த 3 தொகுதிகளிலும் மொத்தம், 92 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்