போலி ஆவணங்கள் மூலம் ரூ. 3.27 கோடி மோசடி : இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் உள்ளிட்டோருக்கு சிறை
போலி ஆவணங்கள் மூலம் 3 கோடி ரூபாய்க்கு மேல் வீட்டுக்கடன் வழங்கி மோசடி செய்த வழக்கில், இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அரக்கோணத்தில், 68 அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்காக, போலி ஆவணங்கள் மூலம் இந்தியன் வங்கி அரக்கோணம் கிளையில் 3 கோடியே 27 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெறப்பட்டது. 2005 ம் ஆண்டு நடந்த இந்த முறைகேடு, 2010ம் ஆண்டு நடந்த தணிக்கையில் தெரியவந்ததை அடுத்து, வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், வங்கி கிளை மேலாளர் சீனிவாசன், வழக்கறிஞர் நாகபூஷணம் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர் விசாரித்தார். சீனிவாசன், நாகபூஷணம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story