சீன அதிபர்- பிரதமர் மோடி வருகை எதிரொலி : மாமல்லபுரத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் ஆய்வு
மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், உள்ளிட்ட10 பேர் கொண்ட குழுவினர் மாமல்லபுரம் வந்துள்ளனர்.
மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், உள்ளிட்ட10 பேர் கொண்ட குழுவினர் மாமல்லபுரம் வந்துள்ளனர். அவர்கள் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர் . பிரதமர் மோடி, சீன அதிபர் இருவரும் கண்டுகளிக்கும் இடங்கள், மேடை அமைய இருக்கும் இடங்களையும் ஆய்வு செய்தனர். அவர்களுடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டனர்.
Next Story