எழுவர் விடுதலையில் பாரபட்சம் ஏன்? ராமதாஸ் கேள்வி

எழுவர் விடுதலையில் பாரபட்சம் ஏன்? ராமதாஸ் கேள்வி
எழுவர் விடுதலையில் பாரபட்சம் ஏன்? ராமதாஸ் கேள்வி
x
25ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்வதில் பஞ்சாப்புக்கு ஒரு நீதி தமிழகத்துக்கு ஒரு நீதியா என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். குருநானக் பிறந்தநாளை யொட்டி பயங்கரவாதி பல்வந்த்சிங் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர் ராஜீவ் வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பாரபட்சம் காட்டுவதா என்றார். இந்த விஷயத்தில் தாமதிக்காமல் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளில் விடுதலை செய்ய ஆளுநர் ஆணையிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்