கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து தேனி வைகை ஆற்றில் இரு கரைகளை தொட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

x
வெள்ளிமலை, வருசநாடு, மேகமலை, கடமலைக்குண்டு உள்ளிட்ட மேற்குதொடர்ச்சி மலைகிராமங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நுரைபொங்க பேரிரைச்சலோடு வெள்ளநீர் கரை புரண்டு ஓடியது. மயிலாடும்பாறை தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக வைகை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம் என்றும் அனைத்து ஊராட்சிகளும் நீரோட்டத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வைகை அணை முழுக்கொள்ளளவான  71 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்