சுபஸ்ரீ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2-வது நபர் கைது : ஜெயகோபால் மைத்துனர் மேகநாதனும் பிடிபட்டார்
சுபஸ்ரீ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2ஆம் நபரான ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் பொறியாளர் சுபஸ்ரீ உயிரிழந்தார். நாடு எங்கும் பெரும் அதிர்வலைகளை இந்த விவகாரம் ஏற்படுத்தியதை அடுத்து, பேனர் வைத்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தலைமறைவானார். சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததையடுத்து, கிருஷ்ணகிரி அருகே பதுங்கி இருந்த ஜெயகோபாலை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 2வது நபரான ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனும் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பதுங்கி இருந்த மேகநாதனை பரங்கி மலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
Next Story