"தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தென் தமிழகத்தின், பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் தமிழகத்தின், பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறை காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் லேசாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
Next Story