நீட் ஆள்மாறாட்டம் : அடுத்தடுத்து அதிர்ச்சி - கடலூர் மாணவியிடம் 3 மணி நேரம் விசாரணை
நீட் ஆள் மாறாட்டம் புகாரில் சிக்கியுள்ள மாணவியிடம், சந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகத்தில், நீட் ஆள் மாறாட்டம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில், கடலூர் மாவட்டம் பென்னடம் பகுதியை சேர்ந்த மாணவி அபிராமி, சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவி மற்றும் அவரின் தாயிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அடுத்தக்கட்ட விசாரணைக்காக மாணவி, தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக சிபிசிஐடி போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
Next Story