"2 மாத வாடகையை தான் முன்பணமாக வாங்க வேண்டும்" - மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டம் வெளியீடு

இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக வாங்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 மாத வாடகையை தான் முன்பணமாக வாங்க வேண்டும் - மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டம் வெளியீடு
x
நாடு முழுவதும் வாடகை வீட்டு வசதியை முறைப்படுத்துவதற்காக, 'மாதிரி வாடகை வீட்டு வசதி சட்ட வரைவை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதில் இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக வாங்க வேண்டும் என்றும் வாடகையை உயர்த்த வேண்டும் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில்  வாடகை தாரர்களின் உரிமைகளுக்கு இணையாக நில உரிமையாளர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் படி, ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், வாடகைத்தாரர் வீட்டை காலி செய்ய மறுத்தால் அபராதம் விதிக்கவும், ஒப்பந்த காலத்துக்கு பின் ஒவ்வொரு மாதத்திற்கும் இரு மடங்கு வாடகையை உரிமையாளர்கள் வசூலிக்க முடியும் என்றும் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, வாடகை தீர்ப்பாயம் அமைக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

Next Story

மேலும் செய்திகள்