நளினியைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை அணுகிய ராபர்ட் பயஸ் : 30 நாள் பரோல் கேட்டு மனு
மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யதற்காக 30 நாட்கள் பரோல் கேட்டு ராஜிவ் கொலை வழக்கு கைதி ராபர்ட் பயஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ராபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில், தான் 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாகவும், தனது கோரிக்கை மீது சிறைத்துறை டிஐஜி எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். தனக்கு பரோல் வழங்கினால், சென்னையிலேயே தங்குவதாகவும் பயஸ் குறிப்பிட் இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு குறித்து விளக்கமளிக்க 2 வார காலம் அவகாசம் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Next Story