"விதிமீறி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்"
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சடித்தால், ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சடித்தால், ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, டிஜிட்டல் பேனர் அச்சக உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுவில், பேனருக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும், விதி மீறி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மனுவை விசாரித்த நீதிபதிகள், சத்தியநாரயணன் மற்றும் சேஷசாயி அமர்வு, மாநகராட்சி நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தனர். தமிழக அரசு மற்றும் மாநகராட்சி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Next Story