யூரியா உரம் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்
யூரியா உரம் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்
யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்டு ஐந்தரை லட்சம் டன் யூரியா தேவைப்படும் நிலையில் 60 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு வழங்குவதாக சுட்டிக்காட்டி உள்ளார். ஸ்பிக் உள்ளிட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில் தற்போது யூரியா தட்டுப்பாடு அதிகரித்து உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். 60 முதல் 70 ரூபாய் அதிகம் விலை கொடுத்து விவசாயிகள் தனியாரிடம் உரங்களை வாங்க வேண்டிய நிலை உருவாகி வருவதாக தெரிவித்துள்ள வைகோ கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Next Story